பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! காட்பாடியில் மற்றொரு ரயில்வே மேம்பாலம் புதியதாக அமைக்கப்படும்!! தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்!!!
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! காட்பாடியில் மற்றொரு ரயில்வே மேம்பாலம் புதியதாக அமைக்கப்படும்!! தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்!!!
வேலூர், அக்.06-திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் தொடர்ச்சியாக பல வளர்ச்சித் திட்டங்களை பெற்று வருவது காட்பாடி தொகுதியாகும்.
கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்
பொன்னை மேம்பாலம், திருவலம் சர்க்கரை ஆலை, குடிக்க பாலாற்று தண்ணீர் (இப்போது காவிரி தண்ணீர்), திருவள்ளுவர் பல்கலைக் கழகம், காட்பாடியை தனி தாலுக்கா என உருவாக்கியது, நீதிமன்றங்கள், சட்டக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், ஆரம்பப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், காட்பாடியை வேலூருடன் இணைக்க விருதம்பட்டிற்கு அருகில் ஒரு பாலம், அம்முண்டி- பூட்டுத்தாக்கு பாலாற்று பாலம், திருவலத்தில் பொன்னை ஆற்றின் மீது என்.எச். பாலம், பல்வேறு அரசு அலுவலகங்கள் என்று கலைஞர் ஆட்சிக் காலத்தில் இப்படி பல நல்ல திட்டங்களை பெற்றது காட்பாடி தொகுதியாகும்.
இன்றைய தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பொன்னை ஆற்றில் ஒரு மேம்பாலம், பரமசாத்து, குகையநல்லூர், சேண்பாக்கம், அரும்பருத்தி போன்ற இடங்களில் தடுப்பணைகள், மேல்பாடி அருகில் பொன்னையாற்றின் குறுக்கே ஒரு மேம்பாலம், சேர்க்காட்டில் 100 படுக்கைகளை கொண்ட ஒரு நவீன மருத்துவமனை, ஆண்கள் கலைக் கல்லூரி உட்பட இந்த ஆண்டு வரப்போகிற சிப்காட் தொழிற்சாலை, காங்கேயநல்லூர்-சத்துவாச்சாரி பாலாற்று பாலம், கல்புதூர்-ஆரப்பாக்கம் (இரத்தினகிரி) வேலூர் சுற்றுவட்டச் சாலை, இப்படி எண்ணற்ற திட்டங்களை பெற்று வந்தது காட்பாடி தொகுதியாகும்.
இன்றைக்கு இன்னும் ஒரு அறிய பெரிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரயில்வே பாதையால் இரண்டாக பிளவுப்பட்டிருந்த ஊர் காட்பாடி. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்த மக்களின் போக்குவரத்திற்காக தொங்கு பாலம் போன்ற ஒரு பாலத்தை கட்டினார்கள். அந்த பாலத்தின் மீது பெரிய வாகனங்கள் போகிறபோது அந்தப் பாலம் ஊஞ்சலாடும்.
மேலும், அந்தப் பாலத்தின் ஓரத்தில் நடந்து போகிற மக்கள் பிடித்துக் கொள்ள எந்தவொரு பிடிமானமும் இருக்காது. உயிரைக் கையால் பிடித்துக் கொண்டுதான் அந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பாலத்தை நவீனமயமாக்கி இருவழிப் பாதையாக கட்டிக் கொடுத்தார்.
ஆனாலும், வளர்ந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் தற்போது அந்தப் பாலத்தில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அந்தப் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்னும் ஒரு பாலம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக ஒரு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழைய பாலத்திற்கு பக்கத்திலேயே சுமார் 25 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு இருவழிப் பாதை மேம்பாலம் கட்டுவதற்கு இப்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வரும்போது காட்பாடி ரயில்வே பாலத்தின் மீது தற்போது ஏற்படுகிற போக்குவரத்து நெரிசல் முழுவதும் குறையும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment