காவலர்கள் எவ்வளவு கடினமான பணிச்சுமை இருந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு போகக்கூடாது! காவல்துறையினர் எப்போதும் மன உறுதியோடு இருக்க வேண்டும்!! காவல் துறையினருக்கான மன அழுத்த மேலாண்மை நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு!!!
காவலர்கள் எவ்வளவு கடினமான பணிச்சுமை இருந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு போகக்கூடாது!
காவல்துறையினர் எப்போதும் மன உறுதியாக இருக்க வேண்டும்!!
காவல் துறையினருக்கான மன அழுத்த மேலாண்மை நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு!!!
புதுச்சேரி காவல் துறையினருக்கான மன அழுத்த மேலாண்மை நிகழ்ச்சி கதிர்காமம், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, காவல்துறை இயக்குநர் ஸ்ரீனிவாஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை,
காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் உடல் அழுத்தத்தோடும், மன அழுத்தத்தோடும் இருந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளுக்கு உணர்வுகளும், உறவுகளும் இருக்காது என்கிற எண்ணம் பொதுவாக நிலவுகிறது. ஆனால், பலர் இறுக்கமான சூழலில் இருக்கிறார்கள். வேலை, குடும்பம் என இரண்டையும் பார்க்கும் போது பல நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் இவ்விரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்வது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பண்டிகை நேரங்களில் கூட விடுமுறை கிடைக்காமல் மக்கள் பாதுகாப்பிற்கு பணியில் இருக்கவேண்டிய சூழல் காவலர்களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தாண்டி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பேசிய தமிழிசை
மகிழ்ச்சியை எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள். ஏனென்றால் மகிழ்ச்சியை தொலைத்து தேடும் பொருள் வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றார்.
எவ்வளவு கடினமான பணிச்சுமை இருந்தாலும் காவலர்கள் தற்கொலை என்கிற முடிவுக்கு எப்போதும் போகக்கூடாது என்று கேட்டுக் கொண்ட தமிழிசை,
காவல்துறை அதிகாரிகள் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உடல் நலத்தையும் கண்காணிக்க வேண்டும் என்றார்.
மேலும், உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ஏனென்றால் ரசித்து ஒரு வேலை செய்யும் போது பணிச்சுமை தெரியாது என்று தெரிவித்த அவர் குடும்ப வாழ்க்கை, பணி, ஆரோக்கியம் இவற்றை சரியாக வைத்துக் கொண்டு சாந்தமான மனநிலையோடு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
Comments
Post a Comment