பாவலர் விஜய சாமுண்டீஸ்வரி எழுதிய இரு நூலினை சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் வெளியிட்டனர்!
பாவலர் விஜய சாமுண்டீஸ்வரி எழுதிய இரு நூலினை சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் வெளியிட்டனர்!
புதுச்சேரி
பாவலர் விஜய சாமுண்டீஸ்வரி எழுதிய, தமிழும் அமுதும் மற்றும் தமிழ் பாக்கள் என்ற இரு நூல்கள் வெளியிட்டு விழா புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு காந்தியப்பன் இராமையா வரவேற்க, தமிழ் சங்க தலைவர் முத்து, மருத்துவ கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் தலைமை தாங்க, சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு என்கிற குப்புசாமி, வைத்தியநாதன் ஆகியோர் நூலினை வெளியிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதல் நூலை ஜனார்த்தனன், ராஜேந்திரன், காந்தியப்பன், விஜயகுமாரி, பரிமளா ஆனந்த நாதன், ஜனனி, ராதாகிருஷ்ணன் முருகையா, குழந்தைசாமி, விஜயலட்சுமி, அன்பரசன், செல்வரசி, ராதா மணவாளன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நூலினை கலைமாமணி சீனு வேணுகோபால் ஆய்வு செய்ய, மருத்துவர் கலைவேந்தன், எழுத்தாளர் ஓவியர் பாரதி வாணர் சிவா, கலைமாமணி அரிமதி இளம்பரிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நூலின் ஆசிரியர் விஜய சாமுண்டீஸ்வரி ஏற்புரை ஆற்றினார்.
இறுதியில் ராதாகிருஷ்ணன் முருகையா நன்றி கூற, விழாவில் ஏராளமான தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment