வைகை ஆற்றை 50-க்கும் மேற்பட்ட ஜேசிபி உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் : மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து துவக்கி வைத்தார்!
பரமக்குடியில் வைகை ஆற்றை 50-க்கும் மேற்பட்ட ஜேசிபி உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் :
ராமநாதபுரம், அக்.20-ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை ஆற்றை பசுமை வைகை... தூய்மை வைகை என்கின்ற தலைப்பில் தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இப்பணியை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவர் - மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட ஜேசிபி உதவியுடன் வைகை ஆற்றில் உள்ள நாணல், குப்பைகளை அகற்றும் பணி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக துவங்கப்பட்ட நிகழ்ச்சியில், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி தாசில்தார் ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட நகராட்சி, வருவாய்த்துறை, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment