உலக இருதய தினத்தை முன்னிட்டு, அரியூர் நாராயணி மருத்துவமனை சார்பில், 480 பேருக்கு இலவச இருதய பரிசோதனையை நடிகரும், திரைப்பட இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் துவங்கி வைத்தார்!

உலக இருதய தினத்தை முன்னிட்டு அரியூர் நாராயணி மருத்துவமனை சார்பில் 480 பேருக்கு இலவச  இருதய பரிசோதனையை
நடிகரும் திரைப்பட இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் துவங்கி வைத்தார்! 
வேலூர், அக்.05- வேலூர் மாவட்டம், அரியூரில் நாராயணி மருத்துவமனையின் சார்பில் உலக இருதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருதய தின விழா நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பாலாஜி தலைமையில் இன்று (04.10.2023) நடைபெற்றது.
          இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் முரளி ராமசாமி, தயாரிப்பாளரும் இயக்குநருமான திருமலை மற்றும் திரளான செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளும், பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.     
        இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரைப்பட இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்து, இருதயம் குறித்து பாதுகாப்பது குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 
          மேலும், 480 ஏழை எளிய நோயாளிகள் பயன்பெறும் வகையில் கார்டியோ இ.சி.ஜி., எக்கோ, ரத்த பரிசோதனைகளை நாராயணி மருத்துவமனையில் விலையில்லாமல் இலவசமாக செய்யும் திட்டத்தினையும் ஜி.வி.பிரகாஷ் துவங்கி வைத்தார். 
      மேலும், சிறப்பாக சேவையாற்றி இருதய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Comments