மாமன்னர் ராஜராஜசோழனின் 1038 சதய விழாவின் முக்கிய நாளான நேற்று அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

மன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவின் முக்கிய நாளான நேற்று அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை! 
    தஞ்சாவூர், அக்.26-மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 சதய விழாவில் இரண்டாம் நாளான நேற்று (25.10.2023) அரசு சார்பில் பெரிய கோவிலில் இருந்து ஊர்வலமாக மாலை எடுத்து வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சோழன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
         முன்னதாக நேற்று காலை 7 மணி அளவில் திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.       
      அதைத்தொடர்ந்து  இராஜ வீதிகளில் திருமுறைகள் வீதி உலா நடைபெற்றது. பின்பு ஒன்பது மணி அளவில் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. 
     பிற்பகல் 1:30 மணி அளவில் பெரிய பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     அதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கத்தினர் அரசியல் கட்சியினர் நேற்று முழுவதும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
    பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன்  தலைமையிலான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
     இந்த நிகழ்ச்சியில்  காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தர்மபுர ஆதீனம், சதய விழா குழு தலைவர் து. செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸிலே, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments