நெய்வேலி, செப்.09-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை ஞாயிற்றுக்கிழமை 10.09.2023 நெய்வேலி, வடக்குத்து கலைஞர் திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் அங்கையற்கண்ணி தம்பதிகளின் மகன் சபா.இரா. சுமந்த், கடலூர் மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் சாரங்கபாணி- செல்வராணி தம்பதிகளின் மகள் சா.தனரஞ்சனி ஆகியோருக்கு நெய்வேலியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நாளை திருமணம் நடைபெறுகிறது.
இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் விழாவில் வரவேற்புரையாற்றுகிறார். கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எ.வ.வேலு, மு.க. தமிழரசன், தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், கழக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் ப. செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தோழமைக் கட்சி நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரி, கோ. பாலகிருஷ்ணன், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், மு.செந்தில் அதிபன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகின்றனர்.
விழாவில் சபாநாயகர் கே.அப்பாவு, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர்.பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ சாமிநாதன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ராமச்சந்திரன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, ஆர்.காந்தி, மா. சுப்பிரமணியன், மூர்த்தி, எஸ்.எஸ். சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், கே. எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வி. மெய்ய நாதன், தா. மனோதங்கராஜ், டி.ஆர்.பி. ராஜா, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கோ.பிச்சாண்டி, கோவி.செழியன், ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
மேலும், மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், பண்ருட்டி டி.ஆர். வி.எஸ்.ரமேஷ், தா.உதயசூரியன், எம்.ஆர். ராதா, கிருஷ்ணன் பொன்.கௌதம சிகாமணி, நா. புகழேந்தி, சிந்தனை செல்வன், டி. ரவிக்குமார், வசந்தம் க. கார்த்திகேயன், ஏ.ஜே. மணி கண்ணன், ஆர். லட்சுமணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நெய்வேலி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், நகர, வட்ட செயலாளர்கள், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் துணைத் தலைவர்கள், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பகுதி செயலாளர்கள் மற்றும் வள்ளலார் கல்வி குழும நிர்வாகிகள் திருமால்வளவன், நடராஜன், சக்கரவர்த்தி, சுப்பிரமணியன், ராஜா, ஜனார்த்தனன், ராஜேந்திரன், கண்ணன், மணிவாசகம், திருவேங்கடம் சரவணன், செல்வராஜ், சரோஜா அம்மாள், சண்முகம், காண்டீபராஜன் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
பண்ருட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சபா. பாலமுருகன் மற்றும் சபா. வெங்கடேசன் ஆகியோர் நன்றியுரை ஆற்றுகின்றனர்.
Comments
Post a Comment