மாணவர்கள் கல்வியை கற்றால் மட்டும் உயர முடியாது! ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்!! உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேச்சு!!!
மாணவர்கள் கல்வியை கற்றால் மட்டும் உயர முடியாது! ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்!!
உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேச்சு!!!
வேலூர், செப்.17- வேலூர் மாவட்டம், அரியூர் தங்க கோவில் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில், தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில், 200 மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெற ரூ.1.50 கோடி மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் வித்யா நேத்ரம் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை வழங்கினார். இவ்விழாவில் ஆன்மீக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் திரளான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேசுகையில், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். கல்வியில் ஆர்வம் செலுத்தி படிக்க வேண்டும். ஆனால் கல்வி கற்றால் மட்டும் போதாது. நல்ல ஒழுக்கத்தினையும் மாணவ, மாணவிகள் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என கூறினார்.
Comments
Post a Comment