புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை!
புதுச்சேரி, செப்.05- புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி யோகி பாபுவிற்கு விபூதி இட்டு ஆசி வழங்கினார். பின்னர் சிறிது நேரம் முதலமைச்சரிடம் உரையாடிய யோகி பாபு பின்பு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் எதற்காக முதலமைச்சர் சந்தித்தீர்கள் என கேட்டதற்கு, நான் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். அதனால் பேட்டி வேண்டாம் என கூறிவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்..
Comments
Post a Comment