கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாநகரத்தின் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா!
கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாநகரத்தின் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா!
கடலூர், செப்.25-கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாநகரத்தின் சார்பில் பாஜக நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை ஆணைக்கிணங்க, இன்று (செப்டம்பர்-25) சிறப்பான முறையில் நடைபெற்றது.
கடலூர் நகர அரங்கத்தின் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீனதயாள் உபாத்யாயா திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன் முன்னிலை வகித்தார். கடலூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களது வாழ்க்கை குறிப்பு பற்றியும், பாரதிய ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோற்றம், கொள்கை, சித்தாந்தங்கள் குறித்தும், நாட்டின் ஒருமைப்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக்காத்து, நாட்டின் சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். மேலும், மேலை நாட்டு சிந்தனைகள், நம் தேசத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பாரதிய சிந்தனைகளை வளர்ப்பதிலும், அதை அரசியல் வழியில் நடைமுறைப்படுத்துவதிலும் வெற்றி கண்டவர் தீனதயாள் உபாத்யாயா என்று
நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேவநாதன், பாஸ்கர் மற்றும் மீனவ பிரிவு மாநில செயலாளர் எழிலரசி, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் 100-க்கும மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment