வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில்அவசர செயற்குழு கூட்டம்!

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில்
அவசர செயற்குழு கூட்டம்!
 வேலூர், செப்.05- வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில்  மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமது சகி தலைமையில் நடைபெற்றது.
       இக்கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச்செயலாளரும், நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 
     மேலும்,  நிகழ்ச்சியில் 
வேலூர் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்,   வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த், வேலூர் மாநகர செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள் S.பாண்டியன், L.மலர்விழி லோகநாதன், G.S.அரசு மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார், துணை மேயர் M.சுனில்குமார் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments