கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்!
கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்!
கடலூர், செப்.24- கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தெருமுனை பிரச்சாரத்தை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார்.
இந்த தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். குறிப்பாக,
கடலூரின் புதிய பேருந்து நிலையம் எம். புதூருக்கு மாற்றும் திட்டத்தை கைவிட்டு கடலூர் மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் அமைத்திட வேண்டும்.
மாநகர் முழுவதும் குப்பைகளை கொட்டி அந்த இடத்தில் எரிக்கப்படும் அவலம். ஒரு குப்பை கொட்டும் இடத்தை தேர்வு செய்ய முடியாத நிர்வாகம். இந்த நிலை உடனடியாக மாற வேண்டும்.
அடிக்கடி கமிஷனர் மாறும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சுற்றுலாத்தலமாக மாற்றும் நடவடிக்கை ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவதை மாற்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகர் முழுவதும் தரமற்ற சாலைகள், பாதாள சாக்கடை சீர்கேடுகளை களைய வேண்டும். புதுப்பாளையம் ஈமச்சடங்கு கொட்டகை புதிதாக அமைக்க நடவடிக்கை வேண்டும். வடிகால் வசதி, சாக்கடை வசதிக்காக பல கோடிகள் செலவு செய்தும் பயனற்றதாகவே உள்ள நிலை மாற வேண்டும்.
மாநகராட்சியின் குடிநீர் சுத்தமாக இல்லாத நிலை மாற வேண்டும். தெருக்களில் மக்கள் அச்சம் இன்றி செல்வதற்கு, சுற்றித்திரியும் நாய்கள், மாடுகள், பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அல்லது தொடங்காவிட்டால், கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், டிசம்பர் முதல் வாரத்தில் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொண்டார்கள்.
Comments
Post a Comment