பி.வ, மி.பி.வ (ம) சீர்மரபினர் இன மக்கள் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி வழங்கும் திட்டம் !!
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இனமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட
இனமக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3.00 இலட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு
ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சலவைத் தொழிலில் ஈடுபட்டுவரும் பி.வ, மி.பி.வ மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண், பெண் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன
சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக பின்வருமாறு வழங்கப்படும். வாஷிங்மிஷன் (10Kg) ரூ.1,00,000, ட்ரையர் (10Kg) ரூ.75,000, Industrial Ironing Table Table, Steamer and Iron box ரூ.50.000, Desk ரூ.10,000 இடைநிகழ் செலவினம் ரூ.30,000, மற்றும் பணி மூலதனம் ரூ.30.000, ஆக மொத்தம் ஒரு குழுவிற்கான தோராய செலவினம் ரூ.3.00.000 வழங்கப்படும்.
பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium
Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
குழு உறுப்பினர்கள் பிவ, மிபிவ, (ம) சீர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1,00,000, க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனவே இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன்அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர். மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர்
இனத்தைச் சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து அக்குழுவின் மூலம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயனடையுமாறு இராணிப்பேட்டை மாவட்ட
ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment