காட்டுமன்னார்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில்மாபெரும் சிறப்பு பொது மருத்துவ முகாம்:ரோட்டரி சங்க தலைவர் எழில் சிவா துவக்கி வைத்தார்!!
காட்டுமன்னார்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் சிறப்பு பொது மருத்துவ முகாம்:
ரோட்டரி சங்க தலைவர் எழில் சிவா துவக்கி வைத்தார்!!
காட்டுமன்னார்கோவில், செப்.03- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர்.கே. கம்யூனிகேஷன், தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் மாபெரும் பொது மற்றும் இருதயநோய் சிறப்பு இலவச மருத்துவ முகாம் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
முகாமினை ரோட்டரி சங்க தலைவர் எழில் சிவா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், சக்கரை நோய், இருதய நோய், பெண்கள் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், குடல் நோய், காது, மூக்கு,தொண்டை, காசநோய், கண் மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு பாண்டிச்சேரி தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை சேர்ந்த 20- க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிந்து பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர்.
மேலும் இந்த முகாமில் உள்நோயாளிகள் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தங்குமிடம்,உணவு உள்ளிட்டவைகளை வழங்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுற்றியுள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து 2000- த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் மதிய உணவு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைவர்கள் அசோகன், ராஜதுரை, செந்தில் குமார், அபிஷேகா வேல்முருகன்,
உறுப்பினர் கெளதமன்,
தலைமையாசிரியர் ஆனந்த, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் முரளி
மற்றும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment