வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால் சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்! புதுச்சேரி சபாநாயகர் மற்றும் டிஜிபி-யிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மனு!!

வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால் சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்!
புதுச்சேரி சபாநாயகர் மற்றும் டிஜிபி-யிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின்  சார்பில் மனு!!
புதுச்சேரி, செப்.23- 
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்  தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஆதரவாளர் வழக்கறிஞர் ராம் முனுசாமி மற்றும் சமூக ஆர்வலர் சீனு, கந்தகுமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது மிரட்டிப் பணம் பறித்து மோசடி செய்ததாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     மேலும் முதலமைச்சர் ரங்கசாமி பெயரைச் சொல்லி அவரது ஆதரவாளர்கள் மோசடி மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் மனு அளித்து இருந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
       இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமையில், புதுச்சேரி காவல்துறை தலைவரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
   அந்த மனுவில்,
பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் 
ராம் முனுசாமி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலரது தூண்டுதலின் பேரில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை காவல்துறை உடனடியாக  திரும்ப பெற வேண்டும். 
       ஸஸஇனி வரும் காலங்களில் வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்பொழுது பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
       இதனைத் தொடர்ந்து சட்டமன்றம் சென்ற அவர்கள்,  சட்டப்பேரவையில் இது குறித்து, சபாநாயகர் செல்வத்தை சந்தித்தும் மனு அளித்தனர்.

Comments