வேலூர், செப்.22- வேலூர் மாவட்டம், காட்பாடியில் இந்து முன்னனி சார்பில் பல்வேறு இடங்களிலும் 13 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
Bகாட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில், சுமார் 150-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அத்துடன் சிலைகள் கரைப்பதற்காக விஐடி பின்புறம் உள்ள இடத்தில் மேள தாளங்களுடன், காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் மற்றும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். இதில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
இந்த விழாவிற்கு தலைமை இந்து முன்னனி மண்டலத் தலைவர் இரவி மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர் பூங்காவனம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ஷீட், பாய் மற்றும் தலையணை
வழங்கப்பட்டது.