பாஜகவினருக்கு திமுகவைப் பற்றி குறை சொல்வதே வேலை!வேறு வேலையே இல்லை என விமர்சித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர்!
பாஜகவினருக்கு திமுகவைப் பற்றி குறை சொல்வதே வேலை!
வேறு வேலையே இல்லை என விமர்சித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர்!
சென்னை, செப்.17-சென்னை, கொளத்தூர் எவர்வின் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலைஞர் மகளீர் உரிமை தொகையாக 1000 ரூபாய் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1000 பள்ளி மாணவிகள் பூக்களை ஏந்தி அலங்கரிக்கப்பட்டு வடிவமைப்பாக அமர்ந்திருந்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.
சென்னை கொளத்தூர் எவர் வின் தனியார் பள்ளியில் படிக்கும் 1000 மாணவிகள் குழுவாக ஒன்று இணைந்து மாணவிகள் பூக்களால் வடிவமைக்கப்பட்டது போன்று அமர்ந்து இருந்தது காண்போரை வியக்க வைத்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
தனியார் பள்ளி முதன்மை தலைவர் புருஷோத்தமன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளீர் உரிமை தொகை திட்டம் துவக்கி வைத்துள்ள நிலையில், தற்போது மட்டுமே ஒரு கோடியே 6 லட்சத்து 50,000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கி சரித்திரத்தில் இடம் பெற்றதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
எவர்வின் கல்வி குழுமத்தினர் தரப்பில்,
பள்ளி வளாகத்தில் ஆயிரம் மாணவிகள் பங்கேற்கின்ற நிகழ்ச்சியில் கையில் பூங்கோத்தோடும் பல டன் பூக்களோடும் கலைஞர் உரிமைத் தொகை என பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாசகங்களுடன் வாழ்த்துக்களை வடிவமைப்பு உடன் செய்து தந்த எவர்வின் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர், மாணவிகளுக்கும் தமிழ்நாடு முதல்வரின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் திமுக அரசு பொறுப்பு ஏற்ற உடன் பல திட்டங்களில் முக்கிய திட்டமான கொரோனாவில் அறித்த 4000 ரூபாய் தொகை , மகளீர்களுக்கு பேருந்துகளில் விடியல் பயணம், சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி, 5 சவரனுக்குள் உள்ள நகை அடகு கடன் தள்ளுபடி, நான் முதல்வர் திட்டம், கல்லூரி ஊக்கத்தொகை என இந்த போன்ற அரசு திட்டங்களை வழங்கியதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனைத்து பொது மக்கள் நன்றி செலுத்தினர்.
திமுக அரசு திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்து கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொகையை ஒருசில நபர்களுக்கு வராததால் கவலைப் பட தேவையில்லை. அதற்கு தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு குறை சொல்லுவதே வேலை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மகளீர் உரிமைத் தொகை 1, லட்சத்து 50,000 பேர்க்கு இந்த உதவி தொகை கிடைத்துள்ளது.
பணக்காரர்களுக்கு இந்த திட்டம் செல்லுபடி ஆகாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment