பாட்டாளி மக்கள் கட்சியின் முதுகெலும்பே அதன் இளைஞர்கள் தான் !பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பங்கேற்ற களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சு!!

பாட்டாளி மக்கள் கட்சியின்  முதுகெலும்பே அதன்  இளைஞர்கள் தான் !
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்  பங்கேற்ற  களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சு!!
         கடலூர்,  செப். 17-
பாட்டாளி மக்கள் கட்சியின்  முதுகெலும்பே அதன் இளைஞர்களும் மற்றும் கடலூர்  மாவட்டமும் தான் 
என்று  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற  களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் 
தெளிவுபடுத்தினார்.
          பாட்டாளி மக்கள் கட்சி   கடலுார் (வடக்கு) மாவட்டம் சார்பில்,  கடலுார் நாடாளுமன்ற  தொகுதிக்குட்பட்ட நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்  கடலூர் மாவட்டம்,  காடாம்புலியூரில், மாவட்ட செயலாளர் கோ.ஜெகன் தலைமையில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர்.கோவிந்தசாமி,  மாநில வன்னியர் சங்க செயலாளரும், கடலுார் எம்.பி., தொகுதி பொறுப்பாளருமான தங்க.அய்யாசாமி, மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன்,  மாநில மாணவரணி சங்கத் தலைவர் கோபிநாத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வேங்கை சேகர், சக்திவேல், அமைப்புச் செயலாளர் கயல்ராஜன், முன்னாள் நிர்வாகிகளான சிறப்பு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,  மாவட்ட செயலாளர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், மகளிரணி சிவகாமி, சுசீலா, விஜயபார்வதி,  சுஜாதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
        நிறைவாக ஞானவேல் நன்றி
தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாட்டாளி மகன் கட்சி  தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : 
     " பாட்டாளி மக்கள் கட்சியின்
கோட்டையே கடலுார் மாவட்டம் தான். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களேயுள்ளது.  
இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற பட்டாளி மக்கள் கட்சி   
அதற்கான பணிகளை தொடங்க வேண்டும். அதற்காகவே, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிகள்  கலந்தாய்வு கூட்டம். 
        பாட்டாளி  மக்கள் கட்சி ஒரு வித்தியாசமான கட்சியும் இளைஞர்கள் அதிகமுள்ள கட்சியுமாகும். ஏனைய  கட்சிகளில் இளைஞர்கள் அதிக அளவில் இல்லை. அதுவே நமக்கு பெருமையாக உள்ளது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் கோடிக்கணக்கான தம்பிகளும், தங்கைகளும் உள்ளனர். நான் ரொம்ப கொடுத்து வைத்தவன். எனக்கு கிடைத்த தம்பிகள், தங்கைகள் போன்று தமிழகத்தில் எந்த தலைவருக்கும் கிடையாது. அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஆற்றல்மிக்க, வீரமிக்க, விவேகமிக்க, திறமையானவர்களே. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய இலக்கே வரும் 2026ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியே நடைபெறும். அது உறுதி. அதற்கு முன்னோட்டம்தான் 2024 ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல்.  
         தமிழக மக்கள் மனநிலை மாறி வருகிறது. 56 ஆண்டு காலங்கள் இரு கட்சிகள் ஆட்சி செய்தது போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.  குறிப்பாக பெண்கள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வருகிறேன். தென் மாவட்டங்களில்  மதுரை, தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி, திண்டுக்கல், மேற்கு பகுதி கோயம்புத்துார், திருப்பூர்,  ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு சென்றாலும், அங்குள்ள மக்கள் இந்த 2 கட்சிகளுக்கும் அளித்த வாய்ப்பு போதும். 
         தமிழ்நாட்டில்  நம் அன்புமணிக்கு  ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக உள்ளது. அங்கேயே அந்த நிலைமைன்னா, நம்ம பகுதி எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க.  அதை உறுதி செய்யும் வகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். 
       அதற்கு   அனைத்து செயல்வீரர்களும், களத்தில் இறங்க வேண்டும். நீங்க இறங்கினா போதும். ஒரு வாக்குச்சாவடியில் சராசரியாக  900  முதல் 1100, அதிகபட்சம் 1200 வாக்குகள் இருக்கும்.
    250 குடும்பங்கள் இருக்கும். அதை களப்பணியாளர்கள் 20 அல்லது 30 வீடுகளில் சனி, ஞாயிறு சென்று, எந்த கட்சி, ஜாதி, மதம், இனம்  இருந்தாலும், எங்க அண்ணன் அன்புமணி அனுப்பி வச்சாரு, உங்கள பார்த்துட்டு வரச் சொன்னாருன்னு மட்டும் சொல்லுங்க, திரும்பவும் அடுத்த வாரம் செல்லுங்கள். 
       மக்களின் மனநிலை மாறியிருக்கும். இந்த மாவட்டத்திற்காக பாட்டாளி 
மக்கள் கட்சி எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த மாவட்டத்தின் முதன்மை பிரச்சினை என்.எல்.சி, இங்கு நிலத்தடி நீர் ஆயிரத்து  200 அடிக்கு
கீழ்  போய்விட்டது. என்.எல்.சி மின்சாரம் இனி நமக்கு வேண்டாம். 800 மெகாவாட் மின்சாரத்திற்காக இப்பகுதியை சீரழித்துவிட்டது.
      இப்பகுதி மக்கள் அடையாளத்தை மாற்றி அகதிகளாக மாற்றி விட்டது. முந்திரி விலை வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே தற்போதைய கடலூர்  திமுக நாடாளுமன்ற  உறுப்பினர் தான். அவர் மடகாஸ்கரில் இருந்து முந்திரியை இறக்குமதி செய்கிறார். இங்குள்ள மக்களை பாதுகாப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். மற்ற கட்சிகள் அடையாளத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் அரசியல் பண்ணக்கூடியது.
    தமிழகத்தில் பெண்கள் வாக்குதான் அதிகம். அவர்களின் மனநிலையில் மாற்றம் வந்துள்ளது. கடலுார் நாடாளுமன்ற  தொகுதியில் 
பாட்டாளி மக்கள் கட்சியே  வெல்லும். 50 ஆண்டு ஆட்சி செய்த இரு கட்சிகளும் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். 
      2016 ஆம் ஆண்டு மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்பது மக்களிடையே வெற்றி பெற்றது."
என பேசினார்.

Comments