அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைச் சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைச் சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
திருவள்ளூர், செப்.01-தமிழ்நாடு 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தலைமையில், 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,  திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைச் சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், அதை பயனாளிகளுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
    மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த 912 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
     முன்னதாக, நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் மணவாளநகர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments