கடலூரில் வரி வாக்களிப்பு நல சங்கத்தின் சார்பாக 2-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா.
கடலூரில் வரி வாக்களிப்பு நல சங்கத்தின் சார்பாக 2-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா.
கடலூர் வரி வாக்களிப்பு நல சங்கத்தின் சார்பாக 2-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கடலூர் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா கடலூர் புதுப்பாளையம் ஏ.ஜே.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் போஸ் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சு.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் வ.முகுந்தன், துணை செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் மாநகராட்சி ஆணையாளர் எம். காந்திராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும், கடலூர் சாதனையாள ர்களை பாராட்டு சால்வை அணிவித்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம், சட்ட ஆலோசகர் தமிழரசன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், எஸ்.கருணாகரன் ,ஆகியோர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். வனிதா சபரீசன், ராணி ராஜதுரை, ஆர். யாழினி, சாரல் பிஜே சங்கர் ஆகியோர் சாதனையாளர்கள் விருது பெற்றனர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எஸ். லியோனார்டு ஜானி மரக்கன்றுகள் வழங்கினார். இறுதியில் பொருளாளர் ப .ஜெயக்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அரசு சந்திராயன் மூன்று ராக்கெட் நிலவில் கால் பதித்து உலக அளவில் பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதல் தெரிவித்தது.
கடலூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வண்ணம் குப்பை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு ஏற்படுத்தி தர கேட்டுக் கொள்ளப்படுகிறது.ஸகடலூர் மாநகராட்சியும் நகர் நல அலுவலர் இல்லாமல் பணிச்சுமை ஏற்படுவதால் உடனடியாக நகர் நல அலுவலர் நியமனம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சர்வேயர் பற்றாக்குறை உள்ளதால் மேலும் ஒரு சர்வேயரை நியமனம் செய்ய வேண்டும்.
மஞ்சகுப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அணைக்கரையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment