தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்!
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்!
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கோரிக்கை!!
இராணிப்பேட்டை மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர் டாக்டர்.பூவை ஜெகன் மூர்த்தியார், புரட்சி பாரதம் கட்சி கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆணைக்கிணங்க, இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் காரை.ஜான் தலைமையில் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட சிபி தலைவர் வெங்கட் (எ) ஸ்டீபன் ராஜ், மாவட்டம் துணைத்தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் எட்வின், மாவட்ட செயலாளர் மூர்த்தியார் பேரவை பாலாஜி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார் கலந்து கொண்டு கட்சியின் நிர்வாகிகளிடம் மற்றும் கட்சியின் வளர்ச்சி பாதைகள் குறித்து கலந்து ஆலோசித்தார்.
இதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையாக பாரதி நகர் பகுதியில் இயங்கி வரும் டி.சி.எல். தொழில் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பல நோய்கள் உண்டாக்கி வருகின்றன.
இதனால் டி.சி.எல் தொழிற்சாலையை தமிழக அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்லவன் குளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 50 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள 50 குடும்பங்களையும் தற்போது அப்பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஆகவே, தமிழக அரசு அந்த 50 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் எஸ்.டி., எஸ்.சி மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு காலி பணியிடங்களை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் இறுதியாக வேங்கை மாறன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment