தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம் ..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி,
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், 87 மையங்களில் கல்வி பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு, 5687 மாணவ மாணவிகளுக்கு, உணவு உண்பதற்கான தட்டு மற்றும் டம்ளர்களை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வாங்கி, அந்தந்த மையங்களுக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு வழங்கினார்.
இந்நிகழ்வில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பிரபாகரன், சத்துணவு மேலாளர் தாஸ் பிரகாஷ், அலுவலக மேலாளர் அலமேலு, காலை சிற்றுண்டி திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment