கொடைக்கானலில் பல உயிர்களை பறிக்க காத்திருக்கும் மின் கம்பங்கள்!!!

கொடைக்கானலில் பல உயிர்களை பறிக்க காத்திருக்கும் மின் கம்பங்கள்!!
.  கொடைக்கானல், ஆக.28-திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உலகப் புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்த கொடைக்கானல் சுற்றுலாத் தலத்திற்கு   தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனத்திலும், வாடகை வாகனத்திடம்   வந்து செல்வது வழக்கம்.
         ஆனால், கொடைக்கானல் வந்தபின் ஏரி பாலம் சந்திப்பில்  தொடங்கி, அப்சர்வேட்டரி வானிலை ஆராய்ச்சி நிலையம் வரை மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ளது.  இந்த மூன்று கிலோமீட்டர் தூரமும் இந்த நெடுஞ்சாலை மேல் நோக்கி சற்று செங்குத்தாக செல்லக்கூடிய சாலை. இருபுறமும் பல இடங்களில் மின் கம்பங்கள் நெடுஞ்சாலைகளிலேயே வாகனம் செல்லக்கூடிய வழியிலேயே உள்ளது.
         இந்த மின் கம்பங்கள்  ஏற்கனவே பல உயிர்களை பறித்து உள்ளது. இன்னும் பல உயிர்களை பறிக்க காத்திருக்கிறது. இந்த ஆபத்தான முறையில் இருக்கும் மின் கம்பங்களை  மின்வாரிய பொறியாளர் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
          ஆனால் உரிய நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் மின்வாரியம்  மின்கம்பத்தை  நடும்போது யாரையும் கேட்பதில்லை. மின்கம்பம் இருக்கும் இடம்  பொது சேவைக்கு தேவைப்படும் பொழுது மின்கம்பத்தை மாற்றி அமைக்கச் சொன்னால் அதற்கு பணம் ஆறாயிரம் பத்தாயிரம் கொடுத்தால் மாற்றி விடுகிறோம் என்று சொல்லுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. 
         மின்வாரியம் மின்கம்பங்கள் நடும் இடமெல்லாம் அவர்களுக்கு சொந்தமான இடம் கிடையாது. மற்றவர்களின் இடத்தில் தான் மின் கம்பங்களை நடுகிறார்கள்.  எனவே, இந்த பணம் பறிக்கும் கொள்கையை விட்டுவிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விபத்துகளின் விபரீதம் கருதி தற்போது அப்சர்வேட்டரி நெடுஞ்சாலை, நெடுஞ்சாலைத் துறையினரால் சாலை சீரமைத்து வருகிறார்கள். எனவே மின்கம்பங்கள் சாலையின் நடுப்பகுதியில் வந்துள்ளது.
         ஏற்கனவே இந்த சாலை ஒருவழிச் சாலையாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும்பொழுது பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதமாகும் சூழ்நிலை பலமுறை உருவாகியுள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் தாமதம் காட்டாமல் சாலைகளின் நடுவே இருக்கும் மின் கம்பங்களை அகற்றி ஒத்துழைப்பு தருமாறு அப்சர்வேட்டரி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
         தவறும் பட்சத்தில் கொடைக்கானல் மிவாரிய அலுவலகத்தை முற்றுகையிட நேரிடும் என அனைவரும் தெரிவிக்கிறார்கள்..

Comments