விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற அறிவியல் கண்காட்சி: சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பங்கேற்பு!
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற அறிவியல் கண்காட்சி:
சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பங்கேற்பு!
மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சியினை பள்ளி மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட கல்வி அதிகாரி மாதேஸ்வரன் மற்றும் மாவட்ட துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கி பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பை சேர்ந்த இளம் இந்தியர்கள் அமைப்பின் உறுப்புத் தலைவர் நாகலட்சுமி பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளர்கள் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதில் சுமார் 15 -க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவியல் மற்றும் புதிய படைப்புகள் சார்ந்த தொழிற்நுட்ப மாதிரிகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதர பிற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும்
இக்கண்காட்சியினை பார்வையிட்டனர். தொடர்ந்து இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பு உரையாற்றினார்.
இதன் முடிவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு (சீனியர், ஜூனியர் பிரிவு) நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதற்கான அனைத்து ஏற்பாட்டினையும் துறையின் பேராசிரியர் தமிழ் சுடர் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments
Post a Comment