வேலூரில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மனித உரிமைகள் தின மாநாடு சிறப்பு கலந்தாய்வு கூட்டம்!

வேலூரில் 
சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மனித உரிமைகள் தின மாநாடு சிறப்பு கலந்தாய்வு கூட்டம்! 
வேலூர், ஆக.29-
வேலூரில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதியன்று மனித உரிமைகள் தின  மாநாடு நடத்துவதற்காக சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிர்வாகிகள் கலந்தலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
   சர்வதேச உரிமைகள் கழக மாநாட்டின் குழு தலைவர் ஆர்.சரவணன், குழு செயலாளர் எம். ரஞ்சித் குமார், குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமேஷ்குமார், ஜெயின் குழு பொருளாளர் சித்ரா விஸ்வநாதன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. 
    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக‌ சர்வதேச உரிமைகள் கழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு, மாநாடு பற்றி  நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் மேற்கொண்டார். 
    நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில பொது செயலாளர் எம்.செந்தில்குமார், வேலூர் மண்டல பொறுப்பாளர் எ.சசிகுமார்  ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாநாடு குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் அனைத்து மாவட்ட நிர்வாகிகள்‌  மகளிர் அணியினர் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments