புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் சாலை மறுசீரமைப்பு பணியினை பூமி பூஜை செய்து முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் சாலை மறுசீரமைப்பு பணியினை பூமி பூஜை செய்து முதலமைச்சர் ரங்கசாமி  தொடங்கி வைத்தார்!
. புதுச்சேரி, ஆக.24-புதுச்சேரி,
கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட, எல்லைப்பிள்ளை சாவடி, அய்யனார் கோவில் வீதி அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மறு சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
        தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில்,  சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
         மேலும், இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments