புதுச்சேரியில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்.

        மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம். 
புதுச்சேரி, ஆக.17-
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று 16-ந் தேதி புதுச்சேரி அரசின் சார்பாக, சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர்  ரங்கசாமி மற்றும்  சட்டப்பேரவை தலைவர் செல்வம்  ஆகியோர் மலர் தூவி  மரியாதை செலுத்தி  அஞ்சலி செலுத்தினர்.
         மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், பாஸ்கர், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments