வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றி எடுத்து கொண்டு தலைமறைவு! மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மனு!!
வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றி எடுத்து கொண்டு தலைமறைவு!
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மனு!!
வேலூர் மாவட்டம், சத்துவச்சாரி பெரிய தெருவில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் ராசி சப்ளையர்ஸ் என்ற இடத்தில் மாத ஏலச் சீட்டு 1,2,3 நடத்தி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றி எடுத்து கொண்டு தலைமறைவான அப்பன் மற்றும் மகன்களையும் கண்டுபிடித்து எங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் இடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவை ஏற்று உரிய அதிகாரிகள் மூலம் தலைமறைவானவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தருவதாக தெரிவித்தார்.
Comments
Post a Comment