வேலூர் திருமலைக்கோடி ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழுமம் மற்றும் டிவைன் கஃபே சார்பில் சிறுதானிய சமையல் போட்டி:டிவி புகழ் சமையல் கலை வித்தகர் டாக்டர்.கே.செப் தாமு பங்கேற்பு!
வேலூர் திருமலைக்கோடி ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழுமம் மற்றும் டிவைன் கஃபே சார்பில் சிறுதானிய சமையல் போட்டி:
வேலூர், ஆக.21-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, திருமலைக்கோடி ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழுமம் மற்றும் டிவைன் கஃபே சார்பில் சிறுதானிய சமையல் போட்டி ஸ்ரீ நாராயணி குழுமம் இயக்குநர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை நாராயணி குழுமம் ஜோதிராம், இணை இயக்குநர் சாந்தி பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
ஸ்ரீபுரம் நாராயணி இயக்குநர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். மேலும், டிவைன் கஃபே அசோசியேட் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்த் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜோதீஸ்வர ரெட்டி கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தார்.
மேலும், இந்த சிறுதானிய சமையல் போட்டியை சிறப்பிக்க, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டிவி புகழ் சமையல் கலை வித்தகர் டாக்டர்.கே.செப். தாமு பங்கேற்று சமையல் கலைஞர்களின் உணவை ருசி பார்த்து சுமார் பத்து நபர்களை தேர்ந்தெடுத்து இந்த 10 நபர்களில் கடைசி தேர்ந்தெடுப்பில் மூன்று நபர்கள் வெற்றி பெற்று முதல் பரிசாக எல்.இ.டி.டிவி சி.எம்.சி. அனுஷ்சிஷ்யா துறை பணியாளரான ஜெயலட்சுமியும், இரண்டாம் பரிசாக பிரிட்ஜ் காட்பாடி திருநகர் மீராவிற்கும், மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷின் அண்ணாநகர் சுமிதா ஆகியோருக்கு செப் தாமு மற்றும் இயக்குநர் பாலாஜி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சிறப்பு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் டிவைன் கஃபே குழுமத்தினரில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
டிவி புகழ் சமையல் கலை வித்தகர் செப். தாமு கூறுகையில், தற்போது ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது எனவும், இயற்கை முறையில் இயற்கையான உணவுகளை சிறுதானிய உணவுகளை அன்றாடம் பயன்படுத்த வேண்டும் என்றும், உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை உணவுதான் மருந்து எனவும் சிறப்புரையாற்றினார்.
விழா இறுதியில் நாராயணி குழுமம் விமலா நன்றியுரையாற்ற, நாட்டுப்பண் பாடப்பட்டு, சிறுதானிய சமையல் போட்டி நிறைவு பெற்றது.
Comments
Post a Comment