தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர், ஆக.24-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம், தஞ்சை மண்டலம் சார்பில், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மண்டல செயல் தலைவர் அனந்த பத்மநாபன், மண்டல துணை செயலாளர்கள் முகமது இஸ்மாயில், வினோத் கண்ணன், மண்டல துணைத் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் மாநில செயலாளர் ராஜப்பா, மண்டல செயலாளர் பாண்டித்துரை ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விளக்க உரையாற்றினர்.
சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் சிறப்புரையாற்றினார். மண்டல பொருளாளர் கண்ணன் நன்றி உரையாற்றினார்.
      இதில்,  பொதுப் பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
     2013 முதல் 2016  ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவக்கால பணியாளர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும்.
       பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளுக்கு உணவு தானியங்கள், தரமானதாகவும், எடை குறைவு இல்லாமல் வழங்க வேண்டும்.
     ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் இ.பி.எப் ஓய்வுஊதித்தைஉயர்த்தி வழங்க வேண்டும்.
     விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கப்படும் அக விலைப்படி, எவ்வித கால தாமதம் இன்றி வழங்கிட வேண்டும்.
     நவீன அரிசி ஆலைகளை தனியார் மயம் ஆக்கக்கூடாது. நவீன அரிசி ஆலையில் பணிசெய்து  ஓய்வு பெற்ற பணியாளர்களை மீண்டும் ஒப்பந்த முறையில் பணி செய்வதற்கு அனுமதி அளித்த தலைமை அலுவலக சுற்றறிக்கையை வாபஸ் பெற்றிட வேண்டும்.
      சுமை பணி தொழிலாளர்களுக்கு ஊதிய கூலி உயர்வை தொழிற்சங்ககளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க வேண்டும்.
      அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 
     கொள்முதல் நிலையங்களில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
     பணி ஓய்வு பெறும் பணியிடங்களை, காலியாக வைத்து பணி சுமையினை அதிகப்படுத்துவதை கைவிட்டு, உடனடியாக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
    தஞ்சை மண்டல பருவகால ஊழியர்களின் மாதாந்திர ஊதியம் வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை சரி செய்து பிரதி மாதம் முதல் வாரத்தில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
    தஞ்சை மண்டல அலுவலக சுற்றுப்புற மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு அலுவலக பயன்பாட்டின் மூலம் வெளியாகும் கழிவு நீரை மாநகராட்சி பாதாள சாக்கடையில் இணைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .
    தஞ்சை மண்டல அலுவலக சாலையை பிரதான சாலை வரையும் சிமெண்ட் சாலையாக மாற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்திவிட வேண்டும் போன்ற  கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    
                   செய்தி....
         தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் ஏ.கே.சுந்தர்.

Comments