காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு பண்டகச்சாலை சார்பில் பாரதி நகரில் புதிய முழுநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன்!
காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு பண்டகச்சாலை சார்பில் பாரதி நகரில் புதிய முழுநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன்!
வேலூர், காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு பண்டகச்சாலை சார்பில், பாரதி நகரில் புதிய முழுநேர நியாய விலைக் கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து சிறப்புரையாற்றியதாவது:
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் பல நலத் திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். அதில் முக்கியமாக பாரதி நகர் பகுதியில் தார் சாலை, கழிவுநீர் கால்வாய் ஆகியவை போடப்பட்டது.
இந்த வார்டில் துணை மேயர் சுனில் குமார் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது வார்டில் எல்லாம் வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர் செய்பவர். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே போல் அனைத்து வார்டு உறுப்பினர்களும் பணி செய்தால் எனக்கு வேலை மிச்சம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment