கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆறாவது மாநாட்டில் திருநங்கை ரக்க்ஷிதாவுக்கு சாதனையாளர் விருது!!..

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆறாவது மாநாட்டில் 
திருநங்கை ரக்க்ஷிதாவுக்கு சாதனையாளர் விருது!!.. 
கடலூர், ஆக.29-கடலூரில் நடைபெற்ற அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆறாவது மாநாட்டில் 
திருநங்கை ரக்க்ஷிதாவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
     கடலூர்  பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.ஸி பயின்று, புனித வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி பயின்று, புதுச்சேரி டி.வி.ஆர் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., பட்டம் பெற்றார். பின்னர் கடலூர் இசைப் பள்ளியில் நாட்டியம் பயின்று, தற்பொழுது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., டாக்டர் பட்டம் பயின்று கொண்டிருக்கும் திருநங்கை ரக்க்ஷிதாவுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆறாவது மாநாட்டில் சிறந்த சாதனையாளராக  சால்வை அணிவித்து கௌரவித்து கேடயம் வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். 
      இந்நிகழ்ச்சியில்,  கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர துணை மேயர்  தாமரைச்செல்வன், மூத்த வழக்கறிஞர் சிவமணி ஆகியோர் உள்ளிட்ட கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Comments