புதுச்சேரி ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் ‌விழிப்புணர்வு‌ சிறப்பு மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி.

புதுச்சேரி ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் ‌விழிப்புணர்வு‌ சிறப்பு மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி.
      கடலூர்,  ஆக.20-
புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் ரெட் ரிப்பன் அமைப்பு சார்பில் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது.
         இந்நிகழ்ச்சி துறை டீன் பேராசிரியர் டாக்டர் ப. செந்தில் குமார்  வழிகாட்டுதலின் படி, இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் சில்வெஸ்டர் மற்றும் கல்லூரியின்  நிர்வாக அதிகாரி சந்துரு  தலைமையில்  நிகழ்ச்சி நடைபெற்றது.  
         மாரத்தான் போட்டியை கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கனேசன்‌, உதவி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் நிர்வாக அதிகாரி ‌ சந்துரு ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
     ஸ மாரத்தான் போட்டி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி கன்னியக்கோவில் வரை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ
மாணவிகள் பங்கு பெற்றனர்.             வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்  வழக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான‌ ஏற்பாடுகளை  நிர்வாக அதிகாரி சந்துரு, ஜெயசூரியா கிரண்குமார், டாக்டர்.வெங்கடேசன்,   கோவர்த்தன விஷ்ணு, சூர்யமூர்த்தி மாணவ, மாணவிகள்  ஆகியோர் செய்திருந்தனர்.

Comments