ராஜ்பவன் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி முப்பெரும் விழா!
புதுச்சேரி, ஆக.25-புதுச்சேரி
காங்கிரஸ் கட்சியின்
மாவட்டத் தலைவர் வேல்முருகன் ஏற்பாட்டில், ராஜ்பவன் தொகுதியில் உள்ள குமரகுருபள்ளம் பகுதியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி முப்பெரும் விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சி வட்டார தலைவர்கள் ஜெரால்டு மற்றும் ராஜ்மோகன் தலைமையில், ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து
குமரகுருபள்ளம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி மருது பாண்டியன் மற்றும் ராஜ்பவன் தொகுதி மாநில நிர்வாகிகள் ராஜாராமன், பிரதீஷ் இருதயராஜ், சார்லஸ் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜ்பவன் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிலம்பரசன் செய்திருந்தார்.
Comments
Post a Comment