நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!
வேலூர், ஆக.21-வேலூர்
மாவட்ட திமுக இளைஞர் அணி,
மாணவர் அணி, மருத்துவரணி
சார்பில், மாணவர்களை மரணக் குழியில் தள்ளும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
வேலூர் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
மேலும், போராட்டத்தில்
மாவட்ட அவைத்தலைவர் தலைவர் தி.அ.முகமது சகி,
மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, வேலூர் மாநகர துணை மேயர் எம்.சுனில் குமார் மற்றும் பகுதி கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, கிளை கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment