இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை சார்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
சேலம், ஆக.20-
இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை சார்பாக நேற்று நடைபெற்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ சங்க வளாகத்தில் மருத்துவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
5 ரோடு பகுதியில் வலம் வந்து மருத்துவ சங்க வளாகத்தில் நிறைவு செய்தனர். இதில் பொது மக்களுக்கு உடல்நலம் பேணுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை பயன்பாடும் அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி போதைப்பொருள் தீமை குறித்து 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு பேரணியில் மது மயக்கம் தரும் மதியை கெடுக்கும், குடி குடியை கெடுக்கும், சில நிமிடம் இன்பம் தொடர்ந்தால் மீளா துன்பம், மதுப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், மதுப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் ஆகிய வாசகங்களை முழக்கமிட்டவாறு சென்றனர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை, முன்னாள் தேசிய துணை தலைவர் மருத்துவர் பிரகாசம் மற்றும் இந்திய மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் பழனியப்பன் செயலாளர் மருத்துவர் சிவசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவர் செல்வங் களஞ்சியம், மருத்துவர் ராஜேஷ், மருத்துவர் கலை மோகன், மருத்துவர் மோகனசுந்தரம், மருத்துவர் தமிழ் செல்வி, மருத்துவர் ராஜேஷ் செங்கோடன் மற்றும் கோகுலம் மருத்துவமனை, தருண் மருத்துவமனை, சண்முகா மருத்துவமனை செவிலியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment