ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத்துறை பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத்துறை பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு...
ராமநாதபுரம், ஆக.19-ராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுத் துறையைச் சேர்ந்த சிறப்பாக பணியாற்றி சிறந்த சமூக சேவையாற்றிய 10 பணியாளர்கள், சிறந்த முறையில் சமூக தொண்டாற்றிய தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோர்களை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டி சிறப்பித்தார்.
             நிகழ்ச்சியில், தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், அமைச்சர் பெருமக்கள், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments