திட்டக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டியினை அமைச்சர் கணேசன் வழங்கினார்.
. திட்டக்குடி, ஆக.16- கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதை பார்வையிட்டார். இதில் விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியன், திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், திட்டக்குடி தலைமையாசிரியர் ஜெய்சங்கர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கமலாம்பாள், டி.எஸ்.பி., காவியா, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன தாளாளர் வெங்கடேசன், திட்டக்குடி தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகராட்சி துணைத் தலைவர் பரமகுரு, அமிர்தலிங்கம், செங்குட்டுவன், திட்டக்குடி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment