"மடியில் கனமில்லை", "வழியில் பயமில்லை" என்ற நிலைப்பாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உறுதியாக உள்ளார்!!

       "மடியில் கனமில்லை,  வழியில் பயமில்லை" 
       என்ற நிலைப்பாட்டில்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  உறுதியாக உள்ளார்!! 
        அமைச்சர் எம்.ஆர்.கே.
பன்னீர் செல்வத்தை கண்டித்து
பாட்டாளி மக்கள் கட்சி கடலுார்
(வடக்கு) மாவட்ட செயலாளர் 
கோ.ஜெகன் பேட்டி...

கடலூர், ஆக. 10-
என்.எல்.சி. இந்தியா நிறுவன விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் 
    அன்பு மணி ராமதாஸ்  மேற்கொண்டுள்ள ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ள தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு  பாட்டாளி மக்கள் கட்சி  கடலுார் (வடக்கு) மாவட்ட செயலாளர் 
கோ.ஜெகன் கண்டனம்
தெரிவித்துள்ளார். 
          இது குறித்து, அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
    மண்ணின் உரிமைக்காக போராடி வருபவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இந்நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் கடலுார் மாவட்ட மக்களையும் நோகச் செய்யும் செயலைத் தான் மண்ணின் மைந்தன் என்று கூறிக் கொண்டுள்ள தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
        என்.எல்.சி. இனி வேண்டாம் என அன்புமணி கூறுவதற்கான காரணங்களை மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.  ஆட்சியில் திமுக அமருவதற்குமுன் 
2021 ஆம் ஆண்டு இதே எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்.எல்.சி மீது இதே குற்றச்சாட்டுக்களை முன் மொழிந்துள்ளார் என்பதை எவரும் மறக்கவில்லை.
      இன்று அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டார் என்பதற்காகவே மருத்துவர் அன்புமணியை குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம் என்பதும் தெரியவில்லை. 
அமலாக்கத்துறை என்றால் திமுகவினருக்கு தான் ‘கிலி’ ஏற்படுகிறது. அதனால் எங்கள் பாட்டாளி மக்கள் கட்சிதலைவரும், திமுக அமைச்சர்கள் போல் பயந்து நடுங்குவார் என எண்ணி உள்ளார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். 
       எங்கள் தலைவருக்கு மடியில் கனமுமில்லை, வழியில் பயமுமில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி  இல்லை என்பது அவரது அரசியல் நிலைப்பாடு. அவர் ஒன்றும் திராவிட மாடல்  அரசு போன்று நடந்து கொள்ளவில்லை. அதற்கு தான் அவர்  நெய்வேலியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நெய்வேலியில் நடந்த முற்றுகை போராட்டத்தின் போது தெளிவாகவே குறிப்பிட்டு இருந்தார். 
        அனைத்திற்கும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை எதிர்க்கும் திமுக அரசு,  என்.எல்.சி விவகாரத்தில் மட்டும் ஏன் எதிர்க்க வில்லை. தமிழகத்தில் அன்னுார் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்.எல்.சி விவகாரத்தில் கண்டும், காணாமல் இருக்கும் அதிமுக, பாஜக வையும் கடுமையாக விமர்சனம் செய்தார் . 
    மக்கள் நலன், மக்கள் உரிமை ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு தான் பாட்டாளி மக்கள் கட்சி  கடந்த 39 ஆண்டுகளாக அரசியல் பயணம் செய்துவருகிறது. 
மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் போராடுவதாக தெரிவிக்கும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 
என்.எல்.சி.யிடம் வீடு, நிலம் கொடுத்து, சொந்த மண்ணில் அகதிகளாக உள்ள மக்களின் நிலை குறித்து ஏன் எடுத்துக் கூறவில்லை. 
           38 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திமுக ஏன் ஒரு நாள் கூட பாராளுமன்றத் தில் கேள்வி எழுப்பவில்லை. வெளிநடப்பு செய்யவில்லை. அமலாக்கத்துறை ரெய்டு வந்து விடும் என்ற அச்சமா?  தனி ஒரு மனிதனாக இந்திய பாராளுமன்றத்தில் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தும், அதே வேளையில் மக்களுக்கான உரிமைகளையும், பிரச்சினைகளையும்  துணிச்சலாக கேள்வி கேட்டும், எழுத்துபூர்வமாக உரிய துறை அமைச்சரிடமிருந்து பதில் பெற்றும் மக்கள் மன்றத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் எங்கள் 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி.
       கடலுார் மாவட்டம் எதிர்கொண்டுள்ள இயற்கை பேரிடர்களை விஞ்ஞான பூர்வமாகவும், எதிர்காலத்தில் நிகழும் அபாயங்களையும் கருத்தில் கொண்டு, பல்வேறு தரகுகளை மேற்கோள்காட்டியும் தான் இம்மண்ணையும், மக்களையும் காத்து வருகிறார். பதவி கிடைத்தால் ஒருமாதிரியும், பதவி இல்லாத போது வேறொரு மாதிரியும் இரட்டை வேடம் போடமாட்டார். பாட்டாளி மக்கள் கட்சி  என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கத்தை உள்ளடக்கியதே ஆகும். 
        ஆகவே, மக்கள் பிரச்சினைகளை நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் எவ்வித சமரசமுமின்றி மக்களிடம் கொண்டு செல்பவர்கள். அன்புமணிக்கு கிடைத்த மத்திய சுகாதாரத்துறையை இன்றளவும் பேசும் பொருளாக வைத்துள்ளார். 
மாநிலங்களவையில்  மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி  அன்புமணியின் கேள்விக்கு தான் பதில் அளித்துள்ளார். தவிர, அவர் மெளணியாக இருப்பதற்கு அல்ல. 
       திமுக கூட்டணியில் உள்ளபிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் என்.எல்.சி விவகாரத்தில் மெளனமாக இருப்பது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு தெரியவில்லையா?
எந்த ஒரு செயலையும், ஆக்கப்பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே மருத்துவர் அன்புமணி ராமதாஸ் களம் காணுவார். என்.எல்.சி விவகாரம் விஸ்வருபம் எடுத்து இருவார காலங்கள் ஆகிய நிலையில், திடீரென துாக்கத்தில் இருந்து விழித்தவர் போல் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை தந்துள்ளார். 
        இதுவரை என்.எல். சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிவர்களின் நிலையை சிறிதும் உணராத எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசின் ஊதுகுழலாக உள்ளார் என்பது அவரது அறிக்கையின் வாயிலாகவே  மக்கள் உணர்ந்துள்ளனர். 
          இனியும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது பொறுப்பற்ற, நியாமில்லாத விவரங்களை முன்னுறுத்தி, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்தால், பொறுத்துக் கொள்ளமாட்டோம். அவருக்கு எதிரான போராட்டத்தை கடலுார் மாவட்டத்தில் மேற்கொள்வோம் என எச்சரிக்கிறோம்." என அவர் தெரிவித்தார்.

Comments