காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்டுமானப் பணியின் போது தோண்டத்தோண்ட கிடைத்த பழமை வாய்ந்த 9 சிலைகள் !!!

காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்டுமானப் பணியின் போது தோண்டத்தோண்ட கிடைத்த பழமை வாய்ந்த 9 சிலைகள் !!!
காட்டுமன்னார்கோவில், ஆக.28-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே  உள்ள 
திருநாரையூர் கிராமம், மேலத்தெருவில் வசித்து வருபவர் கலியன் மகன் 
உத்ராபதி என்பவர்.
     இவர் புதிய வீடு கட்டுவதற்கான பணியில் பூமி பூஜை போட்டு பள்ளம் தோண்டும் பணியினை கட்டிட பணியாளர்களை   வைத்து கடந்த 5 நாட்களாக 
செய்து வந்துள்ளார். 
இந்நிலையில் நேற்று  காலை மீண்டும் கட்டிட பணியாளர்கள் பணியினை மேற்கொண்டனர்.
அப்போது
சில அடி ஆழத்தில்
ஏதோ தட்டுப்படுவது போன்று தெரிந்துள்ளது.
கட்டிட தொழிலாளி  வள்ளல் 
பார்த்தபோது சிலைகள்  போன்று இருப்பது தெரியவந்தது.
    உடனடியாக  வீட்டின் உரிமையாளரிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
அதனையடுத்து 
வீட்டின் உரிமையாளர் உத்ராபதி 
வருவாய்  துறை மற்றும்  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்ப இடத்திற்கு விரைந்து வந்த 
வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், 
இந்து அறநிலையத் துறை அதிகாரி வேல்விழி 
மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, சேத்தியாத்தோப்பு சரக டி.எஸ்.பி ரூபன்குமார் 
ஆகியோர் முன்னிலையில் சிலை கிடைத்த பகுதியில் 
மீண்டும் பள்ளத்தை தோண்டும்  பணி நடைபெற்றது.
   அப்போது   
சிவன் பார்வதி,  
ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பீடத்துடன் கூடிய பஞ்ச மூர்த்திகள் ,
இடம்புரி விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் 
முதற்கட்டமாக கண்டெடுக்கப்பட்டது.
அதனைத் 
தொடர்ந்து ஜெசிபி இயந்திரங்களை கொண்டு மேலும் தோண்டும் பணி தீவிரப்படுத்தபட்டது. அப்போது 
நடராஜர், சோமாஸ்கந்தர்,
நடன சம்பந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய 
4 சிலைகள் உள்பட 9 பழமையான சிலைகள் கண்டுபிடிக்கபட்டது.
    இந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என கடலூர் தொல்லியல் துறையினருக்கு 
சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோதனையில் அனைத்தும் உலோக திருமேனி  பஞ்சமூத்தி சிலைகள் என தெரியவந்தது. மேலும், விலை மதிக்க முடியாதவை எனவும் 
பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொய்மையான சிலை என காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறினார். 
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனையடுத்து  அனைத்து  சிலைகளும்  காவல்துறை  பாதுகாப்புடன்  டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி 
குமராட்சி காவல்  ஆய்வாளர் அமுதா தலைமையில், குமராட்சி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
பின்னர் அந்த சிலைகள் அனைத்தும்  சுத்தம் செய்து 
துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் 
என தெரிகிறது. 
மேலும் சிலைகள்  கிடைத்த பகுதிக்கு அருகில் புகழ் பெற்ற பொல்லா பிள்ளையார் ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஒரே இடத்தில் 9 பழமையானது சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியது.
இதனையடுத்து சாமி சிலைகளை வழிபாடு செய்ய  பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
.  காட்டுமன்னார்கோவில், ஆக.28-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே  உள்ள திருநாரையூர் கிராமம், மேலத்தெருவில் வசித்து வருபவர் கலியன் மகன் 
உத்ராபதி என்பவர்.
        இவர் புதிய வீடு கட்டுவதற்கான பணியில் பூமி பூஜை போட்டு பள்ளம் தோண்டும் பணியினை கட்டிட பணியாளர்களை   வைத்து கடந்த 5 நாட்களாக 
செய்து வந்துள்ளார். 
        இந்நிலையில் நேற்று  காலை மீண்டும் கட்டிட பணியாளர்கள் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது சில அடி ஆழத்தில்
ஏதோ தட்டுப்படுவது போன்று தெரிந்துள்ளது. இதனை
கட்டிடத் தொழிலாளி  வள்ளல் 
பார்த்தபோது அங்கு சிலைகள்  போன்று இருப்பது தெரியவந்தது.
    உடனடியாக  வீட்டின் உரிமையாளரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அதனையடுத்து 
வீட்டின் உரிமையாளர் உத்ராபதி 
வருவாய்  துறை மற்றும்  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
      உடனடியாக சம்ப இடத்திற்கு விரைந்து வந்த 
வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், 
இந்து அறநிலையத் துறை அதிகாரி வேல்விழி 
மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, சேத்தியாத்தோப்பு சரக டி.எஸ்.பி ரூபன்குமார் 
ஆகியோர் முன்னிலையில் சிலை கிடைத்த பகுதியில் 
மீண்டும் பள்ளத்தை தோண்டும்  பணி நடைபெற்றது.
      அப்போது   
சிவன் பார்வதி,  
ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பீடத்துடன் கூடிய பஞ்ச மூர்த்திகள் ,
இடம்புரி விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் 
முதற்கட்டமாக கண்டெடுக்கப்பட்டது.
     ஸஸஅதனைத் 
தொடர்ந்து ஜெசிபி இயந்திரங்களை கொண்டு மேலும் தோண்டும் பணி தீவிரப்படுத்தபட்டது. அப்போது 
நடராஜர், சோமாஸ்கந்தர்,
நடன சம்பந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய 4 சிலைகள் உள்பட 9 பழமையான சிலைகள் கண்டுபிடிக்கபட்டது.
       இந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என கடலூர் தொல்லியல் துறையினருக்கு 
சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    சோதனையில் அனைத்தும் உலோக திருமேனி  பஞ்சமூத்தி சிலைகள் என தெரியவந்தது. மேலும், விலை மதிக்க முடியாதவை எனவும் 
பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொய்மையான சிலை என காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறினார். 
      மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனையடுத்து  அனைத்து  சிலைகளும்  காவல்துறை  பாதுகாப்புடன்  டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி 
குமராட்சி காவல்  ஆய்வாளர் அமுதா தலைமையில், குமராட்சி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
பின்னர் அந்த சிலைகள் அனைத்தும்  சுத்தம் செய்து 
துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் 
என தெரிகிறது. 
மேலும் சிலைகள்  கிடைத்த பகுதிக்கு அருகில் புகழ் பெற்ற பொல்லா பிள்ளையார் ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஒரே இடத்தில் 9 பழமையானது சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியது. இதனையடுத்து சாமி சிலைகளை வழிபாடு செய்ய  பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments