முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின்
ராணிப்பேட்டை, ஆக.21-
ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விசாரம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் எதிரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 79-வது ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார்.
இவ்விழாவின் பொழுது நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்டத் துணைத் தலைவர் ஜி.விநாயகம், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நிஷாத் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலு நகரத் தலைவர், அப்துல் சுகர் அனைவரையும் வரவேற்றார். நகர பொருளாளர் அழகேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான், ஆற்காடு மேற்கு வட்டார தலைவர் புஷ்பராஜ், மாவட்ட செயலாளர் S.T.D. முகமது அமினுல்லா, மாணவர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் தருண் குமார் O.B.C மாவட்ட தலைவர் மொய்தீன்,
ஆற்காடு இலியாஸ், அப்துல்லா, சேட்டு, மோகன், இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தொகுதி தலைவர் சாஹிப் நிக்கால் பயாஸ் வகாப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.