இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றிக் கொண்டாடிய அனைவருக்கும் "நாம் இந்தியர்" அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நன்றிகளை தெரிவித்துள்ளார்!!!

        77-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றிக் கொண்டாடிய அனைவருக்கும் "நாம் இந்தியர்"  அமைப்பின் சார்பில்  வழக்கறிஞர் கார்த்திகேயன் நன்றிகளை தெரிவித்துள்ளார்!!!
      புதுச்சேரி, ஆக.17-
புதுச்சேரி வாழ்மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை புதுச்சேரி மாநில நாம் இந்தியர் அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என நாம் இந்தியர்  அமைப்பின் 
நிறுவன தலைவரும், வழக்கறிஞருமான கார்த்திகேயன் தெரிவித்து மேலும் கூறியதாவது: 
            பற்பல போராட்டங்கள் மூலம் போராடி பெற்ற சுதந்திரத்தின் பெருமையை பறைசாற்ற வேண்டியதும், பேணி காக்க  வேண்டியதும், நாம் இந்தியரான ஒவ்வொருவரின் கடமையாகும். 
         ஆங்கிலேயர் ஆட்சிக்கு கீழிருந்த நம்நாட்டை தங்களது இன்னுயிரையும் இழந்து, சிறைவாச கொடுமைகளை அனுபவித்து, நமக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட தியாகத் தலைவர்களின் தியாகங்களை மதித்து போற்றப்பட வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
         77-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இவ்வேளையில் சுதந்திரத்தின் பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டும். வருகின்ற சந்ததிகளுக்கு விடுதலைக்காக பாடுபட்ட நம் தலைவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
        சுதந்திரத்திற்கு பின்னும் சிதறி கிடந்த நம் பாரத தேசத்தை ஒருங்கிணைத்து ஒரே தேசமாக உருவாக்கி "என் தேசம் - என் மக்கள்" என்ற பிரதமரின் முழக்கத்தின் அடிப்படையில், உலகளவில் போற்றப்படும் மிகப்பெரிய ஜனநாயக சக்தியாக நம் இந்திய திருநாட்டை கட்டிக்காப்பது ஒவ்வொரு இந்தியனின் தலையாயக் கடமையாகும்.
        ஆனால், இதையெல்லாம் மறந்து சில எதிர்க்கட்சிகள் பிரதமரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு தேசத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது என்பது ஏற்க முடியாதது ஒன்று.
        இன்று உலக அரங்கில் இந்தியா தலைசிறந்த நாடாக உருவெடுத்து உள்ளது என்றால் அது நமது பிரதமரின் கடின உழைப்பும் சிறந்த வழிகாட்டுதலே ஆகும்.
இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் அளவில் இந்தியாவின் வளர்ச்சி சென்று கொண்டுள்ளது. 
         அதனால்தான் நாட்டிற்கு பெருமை வாங்கிக் கொடுத்த சுதந்திர போராட்ட கால வீரர்களின் தியாகங்களை பெருமைப்படுத்தும் வகையில் 77-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகின்றோம்.
        மேலும், இதற்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது போன்று, இந்தியரான நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றி இன்று நாம் இந்தியன் என்பதை உலகிற்கு நிரூபித்திருக்கிறோம்.
         நமது கடமையையும், பொறுப்பையும் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் தன்னலமில்லா சுதந்திரப் போராட்ட வேட்கையையும், நமது வருங்கால சந்ததிக்கு உணர்த்துவதுடன், நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி நாம் இந்தியர் என்பதை உலகுக்கு உணர்த்திய நமது புதுச்சேரி வாழ் மக்களுக்கு எனது நன்றியையும், நாம் இந்தியர் அமைப்பு சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என நாம் இந்தியர்  அமைப்பின் 
நிறுவன தலைவரும், வழக்கறிஞருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Comments