திருச்சி, தொட்டியம் கோவில்களின் ராஜாகோபுரத்தில் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை!

     திருச்சி, தொட்டியம் கோவில்களின் ராஜாகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை! 
.     தொட்டியம், ஆக.16-  திருச்சி மாவட்டம், தொட்டியம் அருள்மிகு ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவில் மற்றும் தொட்டியம் சிவன் கோவில்களிலும் ராஜ கோபுரத்தின் உச்சியில் நம் இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றி கோவில் நிர்வாகத்தின் சார்பில் மூவர்ண தேசியக்கொடிக்கு மரியாதை செய்யப்பட்டது.
            இதேபோல் தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அனலாண்டீஸ்வரர் திருக்கோவிலிலும் ராஜகோபுரத்தின் உச்சியில் இந்திய திருநாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
         கோயில்களின் கோபுரத்தின் மேல் தேசியக்கொடி ஏற்றுவதற்கான ஏற்பாட்டினை அருள்மிகு ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோயில் மற்றும் தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அனலாண்டீஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Comments