நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் 50 ஆண்டுகால சிறப்பான சட்டத்துறை பணியினைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து கௌரவிப்பு!
நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்களின் 50 ஆண்டுகால சிறப்பான சட்டத்துறை பணியினைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து கௌரவிப்பு!
கோவை, ஆக.21-கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்டக் கழகத்தின் கௌரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக, நீதிபதியாக, தலைமை நீதிபதியாக கடந்த 50 ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வருவதற்காக அவரது சட்ட பணிகளை போற்றும் விதத்தில் அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், தேவகோட்டையில் பிறந்தவர். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அது அவருக்கு மன உளைச்சல் தந்த காரணத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார். அப்போது அவருக்கு சத்திய சோதனை புத்தகம் கிடைத்தது. அதை படித்த அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு பள்ளி படிப்பை தொடர்ந்தார். தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் பள்ளி கல்வி மற்றும் கல்லூரி சட்டப்படிப்பை படித்து முடித்தார். அவருடைய இளமை காலத்தில் நாடகங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க முயற்சிகள் மேற்கொண்டார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் நட்பு கிடைத்தது. அப்போது தனது நடிப்பு ஆசையை அவரிடம் தெரிவித்தார். அதற்கு அப்போது முதல்வராக இருந்த எம.ஜி.ஆர், அவரிடம் நீங்கள் நீதித்துறையில் சிறந்த இடத்தை அடைந்து சாதிக்க வேண்டும். ஆகவே திரை துறையை தேர்வு செய்யாமல் நீதித் துறையை தேர்வு செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் வழக்கறிஞராக பணியை தொடர்ந்தார். அவருடைய திறமையான வாதத்தின் காரணமாக அரசு தரப்பு வழக்கறிஞராக சிறப்பாக பணியாற்றி பல்வேறு வழக்குகளில் திறமையாக வாதிட்டு பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை பெற்று தந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் நீதிபதியாக, உயர்நீதிமன்ற நீதிபதியாக மற்றும் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றி பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
இப்படி சட்டத்துறையில் கடந்த 50 ஆண்டுகளை கடந்து சிறப்பாக பணியாற்றியமைக்கு தற்போது டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீதியரசர் எம். கற்பகவிநாயகம் மரக்கன்றுகளை நட்டு, ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் புதிய ஆடைகளை வழங்கி, நிகழ்வில் தலைமை உரையாற்றி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இன்று இருக்கும் இளைய தலைமுறையினர் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி தங்களது திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.கே. குமார் தலைமை தாங்கி, வரவேற்புரை வழங்கி, நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் தலைவர் கே.எம். தண்டபாணி கலந்து கொண்டு, நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர் வழங்கிய தீர்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் கொளரவ தலைவரும் முன்னாள் சிபிஐ அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞருமான Rtn.N.சுந்தரவடிவேல், பொதுச் செயலாளர் முனைவர் வி.எச். சுப்பிரமணியம், மாநில தலைவர் ஆர்.ராஜேஷ் குமார், துணைத் தலைவர்கள் எம். கிருஷ்ணசாமி, எஸ்.என். பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணி தலைவி லதா அர்ஜுனன், துணைத்தலைவர் வழக்கறிஞர் சுந்தரபாலன், துணைத்தலைவரும் மற்றும் முன்னாள் காவல் உதவி ஆணையருமான கே.ராமச்சந்திரன், துணைத்தலைவர் வழக்கறிஞர் கே. ஜெயப்பிரகாஷ், துணை செயலாளர் வழக்கறிஞர் ஜி.வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், உதகை ஏ.தமிழ் வெங்கடேசன், அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ. தாமஸ், திருப்பூர் மாவட்ட செயலாளரும் குறும்பட இயக்குனருமான குமார் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயற்சியாளருமான சுரேஷ் பாபு, இணை செயலரும் தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரருமான எழில் மணி, வழக்கறிஞர் ஆறுமுகம், மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலர் அல்லி கொடி அஸ்வின் ஜோன்ஸ் மற்றும் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் கந்தசாமி, அசோக் குமார், படத்தின் கதாநாயகி வெண்மதி, நடிகைகள் மீனா, வீரலெட்சுமி, திவ்யா, இசையமைப்பாளர் பாலகுமார், ஒளிப்பதிவாளர் யாசின், இயக்குனர் குமார் தங்கவேல், அசோசியேட் டைரக்டரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment