தருமபுரியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு (2023-2024) மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம்!
. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், நேற்று (23.08.2023)தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
பொதுக் கணக்குக் குழு (2023-2024) மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஈ.ஆர். ஈஸ்வரன், தா. உதயசூரியன், S.சேகர், S.S. பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று (23-08-2023) நடைபெற்றது.
உடன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தமிழ் நாடு சட்டமன்ற சார்பு செயலாளர் ஜெ.பாலசீனிவாசன், தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment