தமிழ்நாடு வங்கியை உருவாக்கக் கோரியும், வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
தமிழ்நாடு வங்கியை உருவாக்கக் கோரியும், வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய, பெரிய காஞ்சிபுரம், நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.
மாநில சங்க பொதுச்செயலாளர் E.சர்வேசன்
தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட சங்கத் தலைவர் K.B.ரமணன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமான கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பங்கேற்று,
மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் 23மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்கிட வேண்டியும், மாவட்ட, நகரக் கூட்டுறவு வங்கிகளை தரம் பிரிக்காமல் அனைத்து ஊழியர்களுக்கும் 20% ஊதிய உயர்வு அளித்திட வேண்டியும், நகரக் கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்திட வேண்டியும், நகரக் கூட்டிறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தர்ணா போராட்டத்தின் நிறைவாக V.ஹரிகிருஷ்ணன் நிறைவுரையும், சங்கத் தலைவர் P.R.ஹரிகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்றினர்.
Comments
Post a Comment