வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறையில் இறந்து கிடந்த சோக சம்பவம்.....
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில்
பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறையில் இறந்து கிடந்த சோக சம்பவம்.....
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் அடையாளம் தெரியாத நபர் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தையை பக்கெட்டில் வைத்து குழந்தையின் மேல் மக்கை வைத்து மறைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் இன்று(24.08.2023) மதியம் சுமார் 2:30 மணி அளவில் கழிவறையை சுத்தம் செய்யும்போது பக்கட்டில் ஆண் குழந்தை இருந்ததை கண்ட தூய்மை பணியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் தூய்மை பணியாளர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் உள்ள மருத்துவரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதித்துள்ளனர்.
பிறகு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி அவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் அடையாளம் தெரியாத நபர்கள் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தையை பக்கெட்டில் வைத்து குழந்தையின் மேல் மக்கை வைத்து மறைத்து விட்டு சென்றுள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் இன்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் கழிவறியை சுத்தம் செய்யும்போது பக்கட்டில் ஆண் குழந்தை இருந்ததை கண்ட தூய்மை பணியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் தூய்மை பணியாளர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் உள்ள மருத்துவரிடம் தகவல் தெரிவித்தனர்.பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதித்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி அவர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைத்தனர்.
பின்னர் வாலாஜா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குழந்தையை கழிவறையில் வீசிச் சென்ற மர்ம நபர் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைத்தனர்.பின்னர் வாலாஜா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குழந்தையை கழிவறையில் வீசிச் சென்ற மர்ம நபர் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment