மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஊதிய வாய்ப்பு வழிகாட்டி மற்றும்பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கும் 100 மாணவர்களுக்குபரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி!

 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஊதிய வாய்ப்பு வழிகாட்டி மற்றும்
பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கும் 100 மாணவர்களுக்கு
பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி!
வேலூர், ஆக.29-வேலூர் மாவட்டம், காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளி கலை அரங்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
      நிகழ்ச்சி, முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி தலைமையில், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் எம்.அங்குலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்  மற்றும் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.அன்பு முன்னிலையில் நடைபெற்றது.
       தலைமையாசிரியர்
எம்.ஜோதீஸ்வர பிள்ளை வரவேற்புரையாற்றினார். 
       தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் டி.எஸ்.விநாயகம் அறிமுக உரையாற்றினார்.   தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு  எம்.சுந்தரி சிறப்புரையாற்றி  பரிசுகள் வழங்கினார்.  ரோட்டேரியன் ஜவுரிலால் ஜெயின் முன்னாள் ஆளுநர் ரோட்டரி சங்கங்கள் மற்றும் தலைவர் அரிமானால் நிறுவனங்கள், வேலூர் 
வாழ்த்துரை வழங்கினார். 
        விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர்
சங்கர் விசுவநாதன்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 
           மேலும், எம்.ஆர்.பாலாஜி (ஜிம் பாலாஜி)  வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை, ராஜேஷ் ஜெயின் 
L.I.G வேலூர், எம்.பிரித்திவி ராஜ்  இந்தியன் ஆப்டிகல்ஸ் வேலூர், ஆர்.இராதாகிருஷ்ணன் சமூக சேவகர், காட்பாடி
லயன் எம்.கே.பொன்னம்பலம், சொர்ணம் கேஸ் உரிமயாளர், குடியாத்தம், லயன் ஜி.குருகுகன்  சிபா கட்டுமான நிறுவனம், வேலூர்,
பி.மகி ஆகியோர் கலந்து கொண்டனர்.  க.ராஜா நன்றியுரையாற்றினார்.
     இதில்,  ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments