கர்நாடக அரசு மேகதாதுவின் குறுக்கே அணைக் கட்டுவோம் என கூறுவது அரசியலுக்காக தான்!தமிழகம் அதனை ஒரு போதும் அனுமதிக்காது!! தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி!!!
கர்நாடக அரசு மேகதாதுவின் குறுக்கே அணைக் கட்டுவோம் என கூறுவது அரசியலுக்காக தான்!
தமிழகம் அதனை ஒரு போதும் அனுமதிக்காது!!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி!!!
வேலூர், ஜுலை 10, வேலூர் மாவட்டம்,
காட்பாடி, கழிஞ்சூர் ஏரியில் சுமார் ரூ.29 கோடி செலவில் படகு குழாமுடன் பொழுதுபோக்கு மையமாக மாற்றும் பணிகளை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், காட்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள செயல்படாமல் மூடிக்கிடக்கும் நீச்சல் குளத்தையும் திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறுவது அவர்களின் அரசியலுக்காக தான் பேசுகிறார்கள். அவர்களால் மேகதாது அணையை கட்ட முடியாது. காரணம் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். சுற்றுசூழல் துறை, வனத்துறை, காவிரி நதி நீர் ஆணையம், எல்லாவற்றையும்விட தமிழக அரசிடம் ஒப்புதலை பெறவேண்டும். அவ்வளவு சீக்கிரம் அணையை கட்ட முடியாது. நாங்களும் அணையை கட்ட விடமாட்டோம். ஒப்புதலும் தரமாட்டோம். நீதிமன்றம் செல்வோம்.
ஒரு போதும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது. நாங்கள் ஒப்புகொள்ளவே மாட்டோம். தமிழகத்தில் ஆறுகளில் சிறிய செக் டேம்கள் அமைக்கும் பணியை கட்டி வருகிறோம். பாலாற்றில் வெட்டுவானம் சேண்பாக்கம், திருப்பாற்கடல், பசுமாத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் குறுக்கே செக் டேம்களை அமைத்து வருகிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கனிம வளங்களில் 1700 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 1700 கோடி நஷ்டத்தை பூர்த்தி செய்து பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக வெட்டி எடுத்தவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து சரி செய்துள்ளோம்.
எங்கள் ஆட்சியில் எந்த கனிமவள முறைகேடுகளும் நடக்கவில்லை. மேலும் மகளிர் உரிமைதொகை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. யாருக்கு வழங்க வேண்டுமென மனு எழுதிக் கொடுத்தால் வழங்குகிறோம் என கூறினார்.
Comments
Post a Comment