வேலூரில் தங்கும் விடுதி: பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் வைத்த கோரிக்கை! நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!!

வேலூரில் தங்கும் விடுதி: பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் வைத்த கோரிக்கை!
நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!!
வேலூர், ஜுன் 21-
             வேலூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக யாத்ரி நிவாஸ் கட்டித்தர வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கோரிக்கை வைத்தார். 
      இது குறித்து, மத்திய அரசு அறிவிக்கும் முன்பாகவே, தமிழக அரசு சார்பில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
         தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.கதிர் ஆனந்த் தனது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை அவ்வப்போது லோக்சபாவில் பேசி வருகிறார். 
        கடந்த 2021ஆம் ஆண்டு நடாளுமன்றத்தில் வேலூர் நகரத்தில் வெளியூர் பயணிகள் தங்க 'யாத்ரி நிவாஸ்' விடுதி கட்டவும், காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் பூஜ்ஜிய நேரத்தில் குறிப்பிட்டு பேசினார்.
       அவர் தனது உரையில், எனது மக்களவைத் தொகுதியிலுள்ள வேலூர் மாநகராட்சி நகரம் மிகமுக்கியமானது. இங்குள்ள உலகப் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனைக்கு இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால், நோயாளிகளுடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். 
         மேலும் இதில், கட்டணம் அதிகமாக இருப்பதாலும் அங்கே அறை எடுத்து தங்க முடியாதமையால், ஏழை எளியவர்கள் வேறு வழியின்றி நடைமேடைகளிலும், திறந்த வெளியிலும் தங்குவது வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.

Comments